குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

நினைவுகளில் நீங்காத நாளா தமிழா!

நினைவுகளில் நீங்காத நாளா தமிழா!-27.11.2014

இனியும் அவர் இவர் என்றது வேண்டாம்

 

தமிழர் என்ற ஒன்றே  வேண்டும்.

 

பிதற்றும் அரசியல் தலைவர்கள் பிதற்றட்டும்.

 

போராட்டம் ஒரு அணியினருக்கு மட்டும் என்றால்

 

அதை அகற்றப்போராடு. 

 

தமிழர்கள் அனைவருக்கும் என்றால்

 

ஒரு அணியை புகழுவதை விட்டுவிடு.

 

ஒருவரைப் புகழுவதை விட்டுவிடு.

 

ஒரு தனிமனிதரை துாற்றாது இருக்கும்

 

பெருந்தன்மைதனை வளர்த்துவிடு.

 

மறைந்த தியாகிகள்  மகத்தானவர்கள்

 

இருக்கும்நாமோ அவர்களை  வைத்து ....

 

உள்நாட்டில் அவலம்.

 

வெளிநாடுகளில் அலங்கோலம்.

 

 

குதப்பி வெட்டிக் கொண்டாட்டமாம்

 

என்ன குழப்படியோ நாமறியோம்.

 

தமிழன் பெயரைச் சொல்லி

 

அன்னியன் முறைக் கொண்டாத்

 

திண்டாடங்களாம்  கொம்பிற்கு மண்ணெடுப்பாம்.

 

தியாகிகளை நினைக்க விடாது தடுக்கும்

 

நாள்தான் நீங்காத  நினைவான நாளாகும்.

 

 

தியாகிகளே உங்கள் ஆவிகள் ஆவது

 

இவர்களை திருத்திவிட முயலாதா..

 

தியாகிகளின்  சமாதிகளுக்கு

 

ஆராதனைகள்.

 

துயருறும் எம்மவர்க்காய்ப்

 

பிராத்தனைகள்.