குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மார்கழி(சிலை) 6 ம் திகதி வெள்ளிக் கிழமை .

விண்ணுக்கும் மண்ணுக்கும் நுாலிழைத்தவர்களை நினைத்திடும் நாளேகார்த்திகை 27 .

மற்றவர்போல் பிறந்தார்  எப்படி மறவர்  ஆனார்.

தாய்யெனத்தாய்  நாட்டினை  அகமிருத்தினார்.

தந்தையென தலைவன் தளபதிகளின் கட்டளைகளை ஏற்றார்.

உண்மையாய்  உயிரைவிட தமிழ்ப்படையதனை  மதித்தார்.

உண்மை வீரர்களால் உயர்ந்த  தியாகம்

கயவரர்களின் கையகப்படாது  என்றும்  உயரும்.

கனிகள் கையில்  இல்லை என்பதால் மொட்டுகள்  மலரவில்லை என்றாகுமா?

மலர்ந்தவை  மலர்ந்தவைதான்  மனக்கல்லறையில்  உயர்உயிர்ஊற்றுகு்கள் இவர்கள்தான்.

 

நல்ல மனிதர்கள் இவர்களை  எண்ணி நடப்பதால்

இவர்கள்  எண்ணியது  கூட  இனியாயினும் கருவாகட்டும்.

கயவர்கள் திரண்டு கொண்டாலும் கருவழியுமே காரியமாகாது.

மற்றவரை  பாவித்து தானுயரும்  அருவெருப்புக்கள்

உதவியென்பதை யே  அறியார் அருகிலும்  செல்லாதிருப்பது  மாறவர்க்கு  மகிமை.

எம்மிடமில்லாத  உயர்வுகளுள்ள உத்தமரே  மாவீரர்- உயர்தியாகிகள்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் நுாலிழைத்தவர்களை நினைத்திடும் நாளேகார்த்திகை 27 .

 

குமரிநாடு.நெற்   இணையம். 27.11.2015