நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன். ‘’ இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசுக்கு எதிராக நாம் போராடி நமது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். நமது ஈழ மக்களை கொன்று குவித்த சிங்கள ஆட்சியாளர்களை தண்டிக்கவும், கச்சத்தீவை மீட்கவும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகள். ஈழத் தமிழர் பிரச்சனையில் துணிவுடன் செயல்படும் ஜெயலலிதாவை வணிகர் சங்கங்களின் பேரவை மிகவும் பாராட்டுகிறது. மேலும் தமிழக அரசின் தீமானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கை தயாரிப்புப் பொருட்களை புறக்கணிக்கவும், இலங்கையோடு எவ்விதமான வர்த்தக உறவுகளையும் கொள்ள மாட்டோம் என்றும் அறிவிக்கிறோம். இதற்காக முழு மூச்சுடன் வணிகர்களுடன் கலந்து பேசுவோம். தவிரவும் இலங்கையிலிருந்து வரும் எண்ணெய், தேயிலை, ரப்பர் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று வலியிறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இது நமது தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை இதில் நாம் அனைவருக்குமே பொறுப்பு உள்ளது என்பதை புரிந்து கொள்வோம்” த. வெள்ளையன் என தெரிவித்துள்ளார்.