குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சென்னை மாநகர் முழுவதும் தூய்மைப் பகுதியாக அறிவிக்க திட்டம்: விண்ணுார்தி மூலம் முதல்வர் ஆய்வு

06.08.2011-சென்னை மாநகர் முழுவதையுமே தூய்மைப் பகுதியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார் முதல்வர் யெயலலிதா.
இதற்கான வழிவகைகளை கண்டறிவதற்காக சென்னையை சுற்றியுள்ள குப்பை கிடங்குகளை முதல்வர் யெயலலிதா விண்ணுார்தி மூலம் ஆய்வு செய்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழலின் சமநிலையை நிலைநிறுத்தி நாம் சார்ந்திருக்கும் உயிர் சூழல் அமைப்புகளை முறையாக பாதுகாப்பதன் அவசியத்தை தமிழக முதல்வர் யெயலலிதா தலைமையிலான அரசு நன்கு உணர்ந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் செர்வைகளை(பிளாஸ்டிக் )கழிவுகளைத் திரட்டி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும், அவற்றை முறையாக அகற்றுவதையும் ஒரு மாநிலம் தழுவிய மக்கள் இயக்கமாக மேற்கொள்ள 2011 - 12 ம் ஆண்டிற்கான திருத்த வரவு - செலவு மதிப்பீட்டில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சேர்வைப்பொருட்கள் உள்ளிட்ட திடக்கழிவுகளை அகற்றி, சென்னை மாநகரையே ஒரு தூய்மைப் பகுதியாக்கும் வழிவகைகளைக் கண்டறிவதற்காக, சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளையும், சென்னை மாநகரின் குப்பை சேகரிப்பு கிடங்குகளையும் தமிழக முதல்வர் யெயலலிதா நேற்று வானுார்தி மூலம் ஆய்வு செய்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.