குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, வைகாசி(விடை) 17 ம் திகதி திங்கட் கிழமை .

உலக கோப்பை கால்பந்து சுபெயின் வெற்றி இந்தியா தோல்வி

 06.08.2011- உலக கோப்பை (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடரின் லீக் போட்டியில் சுபெயின், நையிரியா உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன. கொலம்பியாவில், பிபா' 20 வயதுக்குட் பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த "சி' பிரிவு லீக் போட்டியில் சுபெயின், ஈக்வாடர் அணிகள் மோதின.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டது.

சி' பிரிவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் கோசுடாரிகா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது. டி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் நைஜிரியா அணி 5-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி, இரண்டாவது வெற்றியை ருசித்தது. மற்றொரு லீக் போட்டியில் சவுதி அரேபியா அணி, கவுதமாலா அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.»கால்பந்து:

 இந்தியா தோல்வி
 வெய்பங் கோப்பை, 19வயதுக் குட்பட்ட கால்பந்து தொடர் சீனாவில் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியா, மெக்சிகோ எப்.சி.சிவாஸ் அணிகள் மோதின.

போட்டியின் துவக்கத்தில் இந்தியாவின் புரோனாய் ஹால்டன் அடித்த கோல் கைகொடுக்க இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதன் பின் எழுச்சி கண்ட மெக்சிகோ அணி, அடுத்தடுத்து கோல் கள் அடித்தது. முடி வில் 1-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல் வியடைந்தது.

மூன்றாவது இடத் துக்கான போட் டியில் இந்தியா, பெனிவிகா அணியை எதிர்கொள்கிறது.