06.08. 2011 தமிழகம் முழுக்க உள்ளூர் கேபிள் சேவைகள் முடக்கியது தமிழக காவற்துறை:-
கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு நெருகமானவருமான பூண்டி கலைவாணனை தமிழக காவற்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
அவர் மீதான் பழைய வழக்குகளை தோண்டி எடுத்த காவல்துறையினர் அவர் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியுள்ளனர்.
சமச்சீர் கல்விக்கு ஆதாரவாக அவர் போராடியதால் முதலில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த போது சிறைவாசலிலேயே அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காளிப்பாளர் ச.முனியநாதன் உத்தரவின் பேரில் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் ரமேஷ் என்பவரது கடையை அடித்து நொறுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதால் இந்த நடவடிக்கை என காவற்துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கேபிள் வழியே தனியார் தொலைக்காட்சிகள் தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றன. இதில் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷனே பெரும்பலான உள்ளூர் கேபிள் நிலையங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நடத்தி வந்தன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுமங்கலி கேபிள் விஷனுக்கு போட்டியாக கேத்வே நிறுவனமும் கேபிள் இணைப்பை வழங்கி வந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் கேத்வே தன் கேபிள் நிறுவனத்தை மூடி இருந்தது. இந்த வகையில் அனைத்து கேபிள் சேவை நிறுவனங்களும் சுமங்கலி கேபிள் நிறுவனத்தோடு இணைக்கப்பட்டு ஒட்டு மொத்த தமிழகமும் மாறன் சகோதரர்களின் எஸ்.சி.வி கட்டுப்பாட்டின் கீழ கொண்டு வரப்பட்டது.
அது போல தென் தமிழகத்தில் மு.க. அழகிர்க்குச் சொந்தமான ராயல் கேபிள் விஷன். தயா டிவி போன்றவை தென் தமிழக கேபிள் நெட்வொர்க்கை ஒருங்கிணைத்து வந்தன. இந்நிலையில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு கேபிள் டிவி தொழிலை அரசுடமையாக்கியது. அரசே கேபிள் வழியாக மக்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் என்று அறித்தது.
இது போக புற்றீசல் போல் செயல்பட்டு வந்த உள்ளூர் கேபிள் நிறுவனங்களின் லைசென்ஸ், ஒளிபரப்பு உரிமங்களை பரிசோதனை செய்யும் படி காவற்துறைக்கு உத்ரவிட்டநிலையில் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி பொன்ற மாவட்டங்களில் இயங்கி வந்த உள்ளூர் கேபிள் நிறுவனங்களில் காவற்துறையினர் திடீர் முற்றுகை நடத்தினர். அனுமதியின்றி படங்கள் ஒளிபரப்புவது, திருட்டி சிடி போடுவது, உரிய லைசென்ஸ் இல்லாமல் செய்திகள், நிகழ்ச்சிகள் ஒளிரப்பரப்பிய குற்றங்களுக்காக உள்ளூர் கேபிள் டிவிகளை மூடி சீல் வைத்துள்ளனர் தமிழக காவற்துறையினர்.
இதனால் பெரும்பலான உள்ளூர் கேபிள் சானல்கள் முடங்கியுள்ளன். சன் டிவி அலுவலகத்திலும் சோதனை நடந்தது குறிப்பிடத் தக்கது.